தீபாவளி பண்டிகை - பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
|தீபவாளி பண்டிகையை முன்னிட்டு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது . இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
தீபாவளி திருநாள் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடலும் கொண்டாடும் சிறப்பான பண்டிகையாகும். மக்கள் தங்கள் வாழ்வில் இருளைப் போக்கி ஒளியை ஏற்றும் தீபஒளி திருநாளாக இதைப் போற்றுகிறார்கள் இந்த இனிய நாளில் தங்களின் துன்பங்கள் நீங்கி செழிப்பான வாழ்வு வாழ, வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில் இறைவனைப் போற்றி புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து இனிப்பு வகைகளை உறவினர்களுக்கும். நண்பர்களுக்கும் வழங்கி, வாழ்த்துக்களைக் கூறி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
தமிழக மக்கள் அனைவருக்கும் தே.மு.தி.க. சார்பில் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .என தெரிவித்துள்ளார்