< Back
மாநில செய்திகள்
தீபாவளி பண்டிகை: அண்ணாமலை  வாழ்த்து
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை: அண்ணாமலை வாழ்த்து

தினத்தந்தி
|
31 Oct 2024 11:05 AM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மக்கள் காலை முதலே பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த தீபாவளித் திருநாள், அனைவரின் வாழ்விலும், அமைதி, ஆரோக்கியம், செல்வம் அனைத்தும் தருவதாகவும், சமூகத்தில் ஒற்றுமை நிலவுவதாகவும் அமையட்டும். இந்த இனிய திருநாளை அனைவரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாட நல்வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார் .

மேலும் செய்திகள்