< Back
மாநில செய்திகள்
விஜய் மாநாடு மிகப்பெரிய வெற்றி - நடிகர் ரஜினிகாந்த்
மாநில செய்திகள்

விஜய் மாநாடு மிகப்பெரிய வெற்றி - நடிகர் ரஜினிகாந்த்

தினத்தந்தி
|
31 Oct 2024 9:18 AM IST

ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மக்கள் காலை முதலே பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் . போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன்புறம் குவிந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார் . ரசிகர்களை பார்த்து கையசைத்து அவர் வாழ்த்து தெரிவித்தார்

பின்னர் ரசிகர்களின் தீபாவளி வாழ்த்தையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்