< Back
மாநில செய்திகள்
தீபாவளி பண்டிகை: ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை: ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

தினத்தந்தி
|
30 Oct 2024 3:03 AM IST

கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கம் பஸ் நிலையம், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாப்படுகிறது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊர் சென்று கொண்டாடுவதை வெளியூர்களில் வசிக்கும் மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து பலர் நேற்று முன்தினம் முதல் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம், எழும்பூர், சென் ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுங்கச்சாவடிகளிலும் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 1 லட்சம் பேர் பயணித்ததாக சொல்லப்பட்ட நிலையில், நேற்று சுமார் 2½ லட்சம் முதல் 4 லட்சம் பேர் பஸ்கள், ரெயில்கள், கார்களில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்