< Back
மாநில செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

தினத்தந்தி
|
29 Oct 2024 7:59 AM IST

சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அவர்களுக்கு 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் அதன் பிறகு டாஸ்மாக் கடை ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என பலருக்கும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு 11 ஆண்டுகளில் முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நான் எக்சிகியூட்டிவ் (non-Executive) பணியாளர்களுக்கு ரூ.15,000 போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யூ. - சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை வைக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்