< Back
மாநில செய்திகள்
தினத்தந்தியின் தலையங்கம் நமது பணிகளுக்கான ஊக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
மாநில செய்திகள்

தினத்தந்தியின் தலையங்கம் நமது பணிகளுக்கான ஊக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

தினத்தந்தி
|
7 Nov 2024 6:56 PM IST

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடர்பாக, தினத்தந்தி நாளிதழில் இன்றைய தலையங்கத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னை,

"அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" எனும் புதிய திட்டத்தை 2023-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டம் பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும். இதில் தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை அரசு மானியமாகவும், 65 சதவீத, மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.

இத்திட்டம் தொடர்பாக, தினத்தந்தி நாளிதழில் இன்றைய தலையங்கத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" - ஆதிதிராவிடர் – பழங்குடியின மக்களில் இருந்து தொழில்முனைவோர்களை உருவாக்கிடும் திராவிட மாடலின் புரட்சித் திட்டம்!

இதுவரையில்,

* பயனாளிகள் - 1988

* கடன் - ரூ.453 கோடி

* மானியம் - ரூ.230 கோடி

தினத்தந்தியின் இந்தத் தலையங்கம் நமது பணிகளுக்கான ஊக்கம் என்றாலும், இதன் நோக்கம் தேவையுள்ள மக்களுக்கு முழுதாகச் சென்றடைய, விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் அனைவரும் இதனைப் பயன்படுத்திக்கொண்டு உயரவேண்டும்!"

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்