< Back
தமிழக செய்திகள்
தேர்தல் கூட்டணிக்காக யாருடனும் ரகசியமாக பேசவில்லை - அண்ணாமலை பேட்டி
சென்னை
தமிழக செய்திகள்

தேர்தல் கூட்டணிக்காக யாருடனும் ரகசியமாக பேசவில்லை - அண்ணாமலை பேட்டி

தினத்தந்தி
|
5 March 2025 5:55 PM IST

தமிழ்நாட்டில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'சமக்கல்வி எங்கள் உரிமை' கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை என்பது காங்கிரசின் கொள்கை; இதை மோடி எதிர்த்துள்ளார். முகாந்திரம் இல்லாத நிலையில் மக்களிடம் பயத்தை ஏற்படுத்தும் விதமாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டம் தேவையற்றது. அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதற்கு முன் பா.ஜ.க. எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இல்லை.

அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மூன்றாவது மொழியை கற்க வாய்ப்பு இல்லாமல் போகிறது. தமிழ்நாட்டில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். 2026-ம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்.

தேர்தல் கூட்டணிக்காக யாருடனும் நாங்கள் ரகசியமாக பேசவில்லை; தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நேரம், காலம் வரும்போது கூட்டணி சம்பந்தமாக பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்