< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி

தினத்தந்தி
|
16 Dec 2024 2:32 AM IST

பக்தர்கள் கடலில் பாதுகாப்பாக குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் சென்றதாலும், கடலில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததாலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோவில் கடலில் குளிக்கவும், கடற்கரையில் தங்கவும் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலையில் திருச்செந்தூர் கடலில் அலையின் சீற்றம் குறைந்து காணப்பட்டது. அதன் காரணமாக பக்தர்கள் கடலில் பாதுகாப்பாக குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.

மேலும் செய்திகள்