< Back
மாநில செய்திகள்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: கமல்ஹாசன், திருமாவளவன் வாழ்த்து
மாநில செய்திகள்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: கமல்ஹாசன், திருமாவளவன் வாழ்த்து

தினத்தந்தி
|
27 Nov 2024 2:36 PM IST

உதயநிதி ஸ்டாலின் மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரலாய்த் திகழும் துணை முதல்வர், என் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மென்மேலும் பல சாதனைகள் படைத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று பிறந்தநாள் காணும் துணை முதல்-அமைச்சர் அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலினுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். 'திராவிடம், தமிழ்த்தேசியம் வேறு வேறு அல்ல; திராவிடம் தமிழ்த் தேசியத்தின் வேர்' என்பதை நிலைநாட்ட, இன்று தங்களின் பங்களிப்பு காலத்தின் தேவையாகி் உள்ளது. கலைஞரின் கருத்தியல் பெயரனாய்க் களமாட, ஊடுருவும் சனாதனப் பகை வெல்ல உளங்கனிந்த நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்