< Back
தமிழக செய்திகள்
வீடு கேட்டு கோரிக்கை வைத்த 6 மணி நேரத்தில் நிதியுதவி வழங்கிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக செய்திகள்

வீடு கேட்டு கோரிக்கை வைத்த 6 மணி நேரத்தில் நிதியுதவி வழங்கிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தினத்தந்தி
|
6 March 2025 9:15 PM IST

திருவாரூர் மாவட்டம், பழவனக்குடியில் வீடு கேட்டு கோரிக்கை வைத்த 6 மணி நேரத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருடன் இன்று காலை கலந்துரையாடினார். அப்போது, அங்கு வருகை தந்திருந்த பழவனக்குடி பொதுமக்களில் ஐந்து பேர் வீடு மற்றும் பட்டா வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அவற்றை நிறைவேற்றும் வண்ணம், திவ்யா ராஜு, நாகராஜ் முருகையன், ஸ்டாலின் சவுந்தரராஜன், சுகன்யா மேகநாதன் உட்பட 4 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான நிதியுதவியை வழங்கும் வகையில் அதற்குரிய ஆணையையும், சுகன்யா மேகநாதனுக்கு வீட்டு மனைப்பட்டாவையும், இன்று மாலையே துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் நேரில் வழங்கினார்.

தங்களுடைய கோரிக்கையை ஏற்று கோரிக்கை விடுத்த 6 மணி நேரத்துக்குள், தீர்வை ஏற்படுத்தி வீடு கட்ட நிதியுதவியும், வீட்டுமனைப் பட்டாவும் வழங்கியமைக்காக பயனாளிகள் ஐவரும் தமிழ்நாடு அரசையும், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்