< Back
மாநில செய்திகள்
குமரி மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மாநில செய்திகள்

குமரி மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தினத்தந்தி
|
3 Nov 2024 6:43 PM IST

குமரி மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாத்தூர் தொட்டிப் பாலம் தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும். வறட்சியை தீர்ப்பதற்காக 1962-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலத்தின் கட்டுமானப் பணி, 1969-ல் முழுமையாக நிறைவு பெற்றது.

இதற்கான நீர் பேச்சிபாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கோதையாறு கால்வாய் வழியாக கொண்டுவரப்படுகிறது. இந்தப் பாலத்தின் கீழ் பரளியாறு என்ற சிற்றாறு பாய்கிறது. கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாத்தூர் தொட்டிப் பாலம் திகழ்கிறது.

இந்த நிலையில், மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாக இன்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகை ஒன்று பாலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதனால் மாத்தூர் தொட்டிப் பாலத்தை காண்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் அருகில் உள்ள பல்வேறு கிராம மக்கள் இந்த தொட்டிப் பாலத்தை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அவர்கள் பல கிலோ மீட்டர்கள் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்