< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
மார்ச் மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் - பதிவுத்துறை அறிவிப்பு

28 Feb 2025 8:56 AM IST
மார்ச் மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக பதிவுத்துறை சார்பில் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
மார்ச் மாதம் முழுவதும் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து இருக்கும். அதன்படி நாளை (1-ந் தேதி), 8, 15, 22 மற்றும் 29 ஆகிய 5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும். மார்ச் மாதம் என்பதால் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது கணக்குகளை நிறைவு செய்வார்கள்.
எனவே மார்ச் மாதம் முழுவதும் வரும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை ஆவணங்கள் பதிவு முடியும் வரை பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட உள்ளது. மேலும் விடுமுறை நாளில் ஆவணப்பதிவிற்கு கூடுதல் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.