< Back
மாநில செய்திகள்
புயல் எதிரொலி - சென்னையில் 13 விமானங்கள் ரத்து
மாநில செய்திகள்

புயல் எதிரொலி - சென்னையில் 13 விமானங்கள் ரத்து

தினத்தந்தி
|
29 Nov 2024 9:46 PM IST

சென்னை விமான நிலையத்தில் 13 விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல், நாளை பிற்பகலில் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 13 விமான சேவை ரத்துசெய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து இரவு 7.25 மணிக்கு மங்களூருவுக்கு புறப்பட வேண்டிய விமானம் மற்றும் இரவு 8.50 மணிக்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

அதேபோல கொல்கத்தா, ஐதராபாத், புவனேஸ்வர், புனே நகரங்களுக்கு செல்லும் 9 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மேலும், மங்களூரில் இருந்து இரவு 11.10 மணிக்கு சென்னை வரும் விமானம் மற்றும் இரவு 11.30 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்துசெய்யப்பட்டு உள்ளன.

விமான புறப்பாடு நேரத்தை அறிந்துகொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு பயணிகளுக்கு விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்