< Back
மாநில செய்திகள்
புயல் எதிரொலி: சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு
மாநில செய்திகள்

புயல் எதிரொலி: சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு

தினத்தந்தி
|
30 Nov 2024 1:16 PM IST

சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

சென்னை,

வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கனமழை எதிரொலியாக சென்னையில் உள்ள அம்மா உணவங்களில் இன்று ஒருநாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்