< Back
மாநில செய்திகள்
காலர் டியூன் மூலம் இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
மாநில செய்திகள்

'காலர் டியூன்' மூலம் இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

தினத்தந்தி
|
22 Dec 2024 12:29 PM IST

‘காலர் டியூன்’ மூலம் மக்களுக்கு இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சென்னை,

இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. புது, புது வழிகளில், மர்ம நபர்கள் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது அதிர வைக்கும் புதிய மோசடி நாட்டின் பல்வேறு இடங்களில் தலை தூக்கி உள்ளது.

'டிஜிட்டல் அரஸ்ட்' என்ற பெயரில் வீடியோ கால் வாயிலாகவும், செல்போன் அழைப்பின் மூலமும் மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறான, சைபர் மோசடிகளில் யாரும் சிக்க வேண்டாம், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சைபர் கிரைம் குற்ற சம்பவங்கள் தொடர்பாக, மத்திய தொலைத் தொடர்புத்துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதாவது, சைபர் கிரைம் விழிப்புணர்வு வாசகங்களை செல்போன் காலர் டியூனாக அமைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, தற்போது, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், தங்களின் வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணின் காலர் டியூனாக, 'சைபர் கிரைம்' விழிப்புணர்வு வாசகங்களை நிறுவி உள்ளன. இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடுத்த 3 மாதங்களுக்கு, நாள்தோறும் 8 முதல் 10 முறை ஒலிபரப்பாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு வாசகங்களுக்கு பிறகே, அழைப்புகள் செல்கின்றன.

மேலும் செய்திகள்