< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அமராவதி ஆற்றின் பாறையில் ஓய்வெடுத்த முதலை - பொதுமக்கள் அச்சம்
|20 Nov 2024 9:33 AM IST
ஆற்றில் குளிக்கும்போது அவ்வப்போது முதலைகள் அருகில் நீந்திச் செல்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் அவ்வப்போது தென்படும் முதலைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மடத்துக்குளத்தையடுத்த தெற்கு கண்ணாடிப்புத்தூர் பகுதியில் நேற்று அமராவதி ஆற்றில் உள்ள பாறையில் முதலை ஒன்று ஒய்யாரமாக ஓய்வெடுத்தது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அந்த முதலையை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
உயிரிழப்புகள் ஏற்படும் முன் முதலையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆற்றில் குளிக்கும்போது அவ்வப்போது முதலைகள் அருகில் நீந்திச் செல்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.