< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லையில் கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா - அமைச்சர் கோவி.செழியன் புறக்கணிப்பு
|26 Oct 2024 9:19 PM IST
நெல்லையில் கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார்.
நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் 33 ஆயிரத்து 821 பேர் பட்டம் பெற்ற நிலையில், 571 மாணவர்களுக்கு கவர்னர் நேரடியாக பட்டங்களை வழங்கினார். இந்த விழாவை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி.செழியன் புறக்கணித்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலும், பேச்சும் தமிழர்களின் மனம் புண்படும்படி இருந்து வருவதாகவும், இதனால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் சமீபத்தில் அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்திருந்தார். இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற 111 பேரில், 97 பேர் பெண்கள் என்பதும், முனைவர் பட்டம் பெற்ற 460 பேரில், 377 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.