தொடர் மழை: நெல்லையில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு
|நெல்லையில் நேற்று இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது.
நெல்லை,
மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இன்றும் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆங்காங்கே உள்ள ஓடைகள், காட்டாறுகள் மூலம் வரும் மழைநீர் ஆற்றில் செல்ல வாய்ப்பு உள்ளது.
எனவே பொதுமக்கள் யாரும் எந்த நீர் நிலைகளிலும் இறங்க வேண்டாம். மின்கம்பங்கள், மரங்கள் அருகில் செல்ல வேண்டாம். கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்திட வேண்டும். குடிநீரை காய்ச்சி ஆறவைத்து பருக வேண்டும்.
அதே நேரத்தில் மழைக்கால அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்ட கட்டுப்பாட்டு மையத்திற்கு 1077, 0462-2501012-க்கும், மாவட்ட காவல்துறைக்கு 0462- 2562500, 99527 40740-க்கும், மாநகர காவல்துறைக்கு 0462- 2562651, 8939948100-க்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவிக்கு 0462 2572099, 73050 95952-க்கும், மின்சாரம் தொடர்பாக புகார்களுக்கு 9498794987-க்கும், மருத்துவ உதவிக்கு 108, 104-க்கும், மாற்றுத்திறனாளிகளின் உதவி மையத்திற்கு 0462 2573267-க்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.