< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் விடுமுறை: தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்
|22 Dec 2024 10:37 PM IST
தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம் - கன்னியாகுமரி இடையே வரும் 24, 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் அதே நாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து 25, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் புறப்படும். இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.