< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'ஓ.டி.டி. தளங்களுக்கு சென்சார் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை' - எல்.முருகன் தகவல்
|10 Nov 2024 6:27 AM IST
ஓ.டி.டி. தளங்களுக்கு சென்சார் கொண்டு வரும் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கோவாவில் நடைபெற உள்ள 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடர்பாக தென்னிந்திய திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளுடன் சென்னை எழும்பூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், இயக்குநர் செல்வமணி, கலைப்புலி தாணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், "தென்னிந்தியாவில் சினிமாவுக்கான தீர்ப்பாயம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை சென்னை அல்லது பெங்களூருவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஓ.டி.டி. தளங்களுக்கு சென்சார் கொண்டு வருவதற்கான புதிய சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையின் முடிவுகளை தொகுத்து சட்டமாக கொண்டு வர இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.