< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரையில் டைடல் பார்க் அமைக்கும் பணி - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு
|29 Oct 2024 11:43 PM IST
மதுரையில் டைடல் பார்க் அமைய உள்ள இடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை,
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நிலத்தில் டைடல் பார்க் அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், டைடல் பார்க் அமைய உள்ள இடத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 12 தளங்கள், 60 மீட்டர் உயரத்தில் டைடல் பார்க் அமைய உள்ளதாக தெரிவித்தார். இதற்கான நிலஎடுப்பு, டெண்டர் பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறிய அவர், விரைவில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 2026-ல் பணிகள் நிறைவடையும் என்று தெரிவித்தார்.