< Back
மாநில செய்திகள்
வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு
மாநில செய்திகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
6 Jan 2025 2:17 AM IST

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான சுடுமண் முத்திரைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள், கண்ணாடி மணிகள் உள்பட 2,960 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், அகழாய்விபோது கூடுதலாக சங்கு வளையல், சில்லு வட்டு மற்றும் பெண்கள் அலங்காரத்திற்கு பயன்படுத்திய படிகமணி கிடைத்துள்ளன. இதனை அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்