< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"பயத்திலிருந்து வரக்கூடிய கருத்துகள்" - ஜெயக்குமாரின் கருத்துக்கு கனிமொழி எம்.பி பதிலடி
|22 Nov 2024 4:23 PM IST
அதிமுகவுக்கு எந்த வேலையும் இல்லை என கனிமொழி எம்.பி தெரிவித்தார். .
சென்னை,
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவிற்கு வனவாசம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி எம்.பி கூறியதாவது,
அதிமுகவுக்கு எந்த வேலையும் இல்லாததால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எல்லோருக்கும் ஆறுதல் சொல்ல தொடங்கிவிட்டார். பயத்திலிருந்து வரக்கூடிய கருத்துகள் தான் அது. என தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்காமலும், பிரச்சினைகளை குறித்து ஆய்வு மேற்கொள்ளாமலும் இருப்பது கண்டனத்துக்குரியதாக உள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. என தெரிவித்தார்.