< Back
மாநில செய்திகள்
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் நடிகர் சாப்ளின் பாலு
மாநில செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் நடிகர் சாப்ளின் பாலு

தினத்தந்தி
|
27 Nov 2024 4:20 AM IST

2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி பிரமாண்டமாக நடந்தது. மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநாட்டை தொடர்ந்து வருகின்ற 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். இதற்கிடையில் மாற்று கட்சியினரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜயுடன் 26 படங்களுக்கு மேல் இணைந்து நடித்த தாராபுரம் சட்டமன்ற பகுதியைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் சாப்ளின் பாலு தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்