தம்பி இறந்த துக்கத்தில் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
|தம்பி இறந்த துக்கத்தில், கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்,
நாமக்கல்லில், தம்பி இறந்த துக்கம் தாங்க முடியாமல், தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த காவிய தர்ஷினி என்பவர், திருச்செங்கோடு அருகே எளையாம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், அவர் தங்கியிருந்த விடுதியின் அருகே காவிய தர்ஷினி சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், காவிய தர்ஷினியின் சகோதரர் கடந்த ஆண்டு உயிரிழந்ததால், அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று காவிய தர்ஷினி கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.