< Back
மாநில செய்திகள்
செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

தினத்தந்தி
|
5 Nov 2024 3:00 AM IST

செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகள் சத்தியப்ரீதிகா (17 வயது). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி சத்தியப்ரீதிகா வீட்டில் செல்போனை பார்த்துக்கொண்டிருந்தபோது பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த சத்தியப்ரீதிகா விஷம் குடித்தார். இதில் மயங்கிய அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்