< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் விரக்தி: கல்லூரி மாணவி தற்கொலை
|12 Dec 2024 2:17 PM IST
செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் அருகே எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி திரு.வி.க .நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் தரண்யா ஸ்ரீ (19 வயது). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி செல்போன் பார்க்கும் பழக்கம் உண்டு. அதனை அவரது தாயார் விஜயலட்சுமி கண்டிப்பதும் உண்டு.
இந்த நிலையில் சம்பவத்தன்று தரண்யா ஸ்ரீ செல்போன் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் விரக்தியில் தரண்யா ஸ்ரீ, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.