< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
|30 Nov 2024 2:31 PM IST
செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு,
ஈரோடு அருகே உள்ள நசியனூர் அண்ணா சாலையை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகள் ரக்சிதா (18 வயது). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து ரக்சிதா வீட்டுக்கு வந்து உள்ளார். பின்னர் அவர் செல்போனை எடுத்து, அதை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் இரவிலும் செல்போனை பார்த்து கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்த அவரது பெற்றோர், ரக்சிதாவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரக்சிதா வீட்டில் தனது அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் மகள் தூக்கில் தொங்கியதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.