< Back
தமிழக செய்திகள்
கோவை: குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை - பொதுமக்கள் பீதி

கோப்புப்படம் 

தமிழக செய்திகள்

கோவை: குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை - பொதுமக்கள் பீதி

தினத்தந்தி
|
30 Jan 2025 8:13 AM IST

வீராலியூர் கிராமத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்த முதியவரை காட்டு யானை துரத்தியது.

கோவை,

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஜாகீர்நாயக்கன்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று சுற்றித்திரிகிறது. இந்த யானை வீடுகளையோ, பொருட்களையோ சேதப்படுத்துவது இல்லை. ஆனால் குடியிருப்பு பகுதியில் பிளிறியபடி உலா வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் வீட்டைவிட்டு வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காட்டு யானை ஜாகீர்நாயக்கன்பாளையம் அடுத்துள்ள அய்யாசாமி கோவில்-செலம்பனூர் சாலை பகுதிக்குள் புகுந்தது. தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானை ரங்கராஜ் என்பவரின் வீட்டின் முன்பு முகாமிட்டது. நீண்ட நேரமாக பிளிறியபடியே நின்ற காட்டு யானையால் வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர்.உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

காட்டு யானை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீராலியூர் கிராமத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்த முதியவரை காட்டு யானை துரத்தியது. அவர் அதிர்ஷ்டவசமாக ஓடிச்சென்று உயிர்தப்பினார். எனவே காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்