< Back
தமிழக செய்திகள்
கோவை - தன்பாத் சிறப்பு ரெயில் இயக்கப்படும் நேரம் மாற்றம்
தமிழக செய்திகள்

கோவை - தன்பாத் சிறப்பு ரெயில் இயக்கப்படும் நேரம் மாற்றம்

தினத்தந்தி
|
18 Feb 2025 7:41 AM IST

இணைப்பு ரெயில் வருவதில் தாமதம் காரணமாக ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

கோவை,

கோவையில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (03680) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கோவையில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.17 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

இந்த நிலையில், இணைப்பு ரெயில் வருவதில் தாமதம் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த ரெயில் 16 மணி நேரம் கால தாமதமாக கோவையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்