< Back
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு வழக்கு: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு வழக்கு: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

தினத்தந்தி
|
23 Oct 2024 2:33 AM IST

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை,

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு கார் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த வழக்கில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் இதுவரை 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை போலீஸ் காவலிலும் எடுத்து விசாரித்து பல்வேறு விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் கோவை உக்கடத்தைச் சேர்ந்த அபு அனிபா, பாவாஸ் ரகுமான், சரண் உள்ளிட்ட 3 பேரை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து நேற்று பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

இதனை விசாரித்த நீதிபதி 3 பேரையும் நவம்பர் 5-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த போலீஸ் காவலுடன் 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்