< Back
மாநில செய்திகள்
கடலூரில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 11-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

கடலூரில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 11-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
26 Nov 2024 7:37 PM IST

கடலூரில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 11-ம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கைலாஷ் என்ற மாணவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேவனாம்பட்டிக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் இருந்து எதிர்பாராத விதமாக மாணவர் கைலாஷ் தவறி விழுந்த நிலையில், பேருந்தின் பின் சக்கரம் அவரது தலை மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் கைலாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கடலூரில் இன்று காலை முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில், அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மழை காரணமாக பள்ளி மாணவர்கள் வீடு திரும்புவதில் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்த சூழலில், பள்ளி மாணவர் ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்