< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை: பெங்களூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
|23 Dec 2024 6:54 AM IST
பெங்களூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை,
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவில் இருந்து இன்று (23-ந்தேதி) இரவு 11 மணிக்கு புறப்பட்டு கொச்சுவேலி வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06507), சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொச்சுவேலி வந்தடையும்.
மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து நாளை (24-ந்தேதி) மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06508), இதே வழித்தடம் வழியாக மறுநாள் காலை 11.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.