< Back
மாநில செய்திகள்
த.வெ.க. தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்து
மாநில செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்து

தினத்தந்தி
|
14 Nov 2024 12:23 PM IST

மழலைச் செல்வங்களுக்கு சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிடஉறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனது, பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல் போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல், தெளிந்த நீரைப் போல் பரிசுத்தமானது. நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்தக் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்! குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்துப் போற்றி மகிழ்வோம்! இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்