< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தை சட்டமற்ற காடாக மாற்றியதற்கு முதல்-அமைச்சர் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை ஆவேசம்
|20 Nov 2024 4:02 PM IST
பிரச்சினைகளை சரி செய்ய அரசு முயற்சிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தஞ்சாவூரில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார், ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். இவை தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை பிரதிபலிக்கிறது.
தமிழகத்தை சட்டமற்ற காடாக மாற்றியதற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். பிரச்சினைகளைத் திசைதிருப்புவதை விட அதனை சரி செய்ய இந்த அரசு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை நாம் காண முடியாது.என தெரிவித்துள்ளார் .