< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்: அமைச்சர் ராஜேந்திரன்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்: அமைச்சர் ராஜேந்திரன்

தினத்தந்தி
|
21 Oct 2024 2:30 AM IST

தமிழக மக்களுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார் என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.

சேலம்,

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:-

தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம், மகளிர் விடியல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்களை வெளி மாநிலம் மட்டும் இன்றி வெளி நாட்டினரும் பின்பற்றி வருகின்றனர்.

அதே வழியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார். வடகிழக்கு பருவமழைக்கு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றார்.

இந்திய வரலாற்றிலேயே மாமல்லபுரத்தில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி காண்பித்தார். தமிழக மக்களுக்காக உழைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு மக்கள் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்