< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
|9 Dec 2024 10:54 AM IST
சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வலிமையான சவால்களில் வழிநடத்துவது முதல் கருணையுடன் வழிநடத்துவது வரை, அவரது பயணம் நெகிழ்வு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக உள்ளது. அவருக்கு வெற்றியும் அமைதியும் நிறைந்த நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.