< Back
மாநில செய்திகள்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
28 Nov 2024 1:49 PM IST

இளங்கோவனின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். 75 வயதாகும் அவருக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று டாக்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். முன்னதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்தாண்டு காலமானார். இதையடுத்து, நடைபெற்ற இடைத்தேர்தலில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்