< Back
மாநில செய்திகள்
நாகை திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மாநில செய்திகள்

நாகை திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தினத்தந்தி
|
3 March 2025 7:57 PM IST

நாகை திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

அரசு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினம் சென்றார். அவருக்கு திமுகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பால்பண்ணைச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட 'தளபதி அறிவாலயம்' என்ற தி.மு.க. கட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் வெண்கல சிலைகளையும் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் தளபதி அறிவாலயத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை கட்சியினருக்கு வழங்கினார். பின்னர் முதல்-அமைச்சர் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சிக்கு சென்று விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

மேலும் செய்திகள்