< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
எல்லை போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|1 Nov 2024 11:14 AM IST
தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் இன்று என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1.
தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.