முதல்-அமைச்சர் , துணை முதல்-அமைச்சர் எல்லா சூழலிலும் உதவியாக இருந்தனர்: குகேஷ் பேட்டி
|இளம்வயதில் உலக செஸ் சாம்பியனானதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குகேஷ் கூறினார்.
சென்னை,
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உலக செஸ் சாம்பியன்ஷிப் விளையாட வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. சிறிய வயதில் இருந்தே ஆசைப்பட்டது நிறைவேறிய தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. வெற்றி பெற்ற தருணம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. இளம்வயதில் உலக சாம்பியனானதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியது கடினமாக இருந்தது; டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன். நானே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம். செஸ் ஒரு அழகான விளையாட்டு; அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும். திட்டம் சரியாக இருந்தால், வெற்றி அடையலாம்.
எனக்கு தேவையான எல்லா உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் எல்லா சூழலிலும் தேவையான நிதியுதவி வழங்கி ஊக்குவித்தனர். அவர்களுக்கு நன்றி. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடரை அரசு நடத்தியது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இதுபோல தொடர் ஆதரவு கிடைத்தால் பல இளம் செஸ் வீரர்கள் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.