< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை மயிலாப்பூர்: பறக்கும் ரெயில் மேம்பாலத்தில் இருந்து தள்ளிவிட்டு ஒருவர் கொலை
|10 Dec 2024 7:51 AM IST
ரெயில் மேம்பாலத்தின் மேல் இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டநிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை மயிலாப்பூரில் உள்ள பறக்கும் ரெயில் மேம்பாலத்தின் மேல் இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. மோதல் முற்றியதில் பறக்கும் ரெயில் மேம்பாலத்தில் இருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டார்.
இந்நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்ட போது படுகாயமடைந்த பட்டினப்பாக்கத்தை சேர்ந்த லூயிஸ் பத்தியாஸ் (40) என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.