< Back
தமிழக செய்திகள்

கோப்புப்படம்
தமிழக செய்திகள்
பொய்யான அறிக்கை தாக்கல்: நீலகிரி கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம்

29 Jan 2025 9:05 PM IST
வரும் 4-ம் தேதி நீலகிரி மற்றும் திண்டுக்கல் கலெக்டர்கள் காணொலி மூலம் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக பொய் அறிக்கை தாக்கல் செய்ததாக நீலகிரி கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
வன விலங்குகள், வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்தபோது சென்னை ஐகோர்ட்டு இதற்கான கண்டனம் தெரிவித்தது.
மேலும் நீலகிரியில் பிளாஸ்டிக் தடை, குடிநீர் விநியோக மையங்கள் போன்றவை செயல்படவில்லை என்றும், பிளாஸ்டிக் தொடர்பாக எந்த பரிசோதனைகளும் நடத்தப்படுவதில்லை, இ-பாஸ் நடைமுறை, முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் நீதிமன்ற உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களுடன் பேருந்துகள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிப்.4ம் தேதி நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் காணொலி மூலம் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.