< Back
தமிழக செய்திகள்

கோப்புப்படம்
தமிழக செய்திகள்
நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த.. சென்னை ஐகோர்ட்டு விதித்த அதிரடி உத்தரவு

4 Feb 2025 10:12 PM IST
நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைகட்டுப்படுத்தும் விதமாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு இன்று பிறப்பித்த உத்தரவில், நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்றும் இப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என்றும் சென்னை ஐகோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.