< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

17 Jan 2025 10:49 PM IST
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நில மோசடி தொடர்பாக தனது யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர் தவறான தகவல் பரப்புவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி பிரிவு இன்ஸ்பெக்டர் சிவ சுப்ரமணியன் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு கீழமை நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.