< Back
மாநில செய்திகள்
சென்னை எழும்பூர் - ராமேசுவரம் விரைவு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
மாநில செய்திகள்

சென்னை எழும்பூர் - ராமேசுவரம் விரைவு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்

தினத்தந்தி
|
3 Dec 2024 3:09 PM IST

சென்னை எழும்பூர் - ராமேசுவரம் விரைவு ரெயிலின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையினால் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

கனமழையினால் விக்கிரவாண்டி சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரெயில்வே பாலத்தை ஒட்டி மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் சேவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், இன்று சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரெயிலின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து இன்றிரவு 7.15-க்கு பதிலாக இரவு 9.15 மணிக்கு ரெயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு ரெயில் தாமதத்தால் ராமேசுவரம் விரைவு ரெயிலின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்