மதுரை, திருச்சியில் இருந்து சென்னைக்கு இன்று முன்பதிவில்லா சிறப்பு ரெயில்
|சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கி வருகிறது.
சென்னை,
பயணிகள் வசதிக்காவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தாம்பரம்- திருச்சி, சென்னை எழும்பூர் - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து இன்று(3-ந்தேதி) காலை 8.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்(வண்டி எண்.06007), அதேநாள் மதியம் 1.40 மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமார்க்கமாக, திருச்சியிலிருந்து இன்று இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்(06008), மறுநாள் காலை 6.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்கள் 12 பெட்டிகள் கொண்டது.
இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து இன்று காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் அதிவிரைவு முன்பதிவில்லா சிறப்பு ரெயில்(06099), அதேநாள் மாலை 6.30 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து இன்று இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு முன்பதிவில்லா சிறப்பு ரெயில்(06100), மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில் சென்னை எழும்பூர் செல்லாது. தாம்பரத்தில் நிறுத்தப்படும். இந்த ரெயில்கள் 12 பெட்டிகள் கொண்டது. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.