சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
|சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி வழியாக சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.06741), அதற்கு மாற்றாக சென்டிரலில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு, காலை 7.10 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும். அங்கிருந்து சூலூர்பேட்டைக்கு காலை 8 மணிக்கு செல்லும்.
* சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு கூடூர் வழியாக நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயில் (06745), அதற்கு மாற்றாக சூலூர்பேட்டையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, காலை 9.27 மணிக்கு கூடூர் சென்றடையும். அங்கிருந்து நெல்லூருக்கு காலை 10.30 மணிக்கு செல்லும்.
* சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக சென்டிரலில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு, காலை 6.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.