< Back
மாநில செய்திகள்
சென்னை: தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம்
மாநில செய்திகள்

சென்னை: தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம்

தினத்தந்தி
|
17 Dec 2024 5:35 PM IST

அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பைக், ஆட்டோ, டிரை சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

சென்னை,

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி வாகனங்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து நேரிட்டது. தாறுமாறாக ஓடிய கார் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ, பைக், சாலையோரம் டிரை சைக்கிளில் இளநீர் கடை வைத்திருந்த நபர் உள்பட 4 பேர் மீது பயங்கரமாக மோதியது. இதில் காயமடைந்த 4 பேர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை ஓட்டி வந்த பிரகதீஷ் (வயது 29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இவர் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை தொடங்கி உள்ளார்கள்.

மேலும் செய்திகள்