< Back
மாநில செய்திகள்
நெல்லை வட்டாட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
மாநில செய்திகள்

நெல்லை வட்டாட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தினத்தந்தி
|
15 Nov 2024 10:56 PM IST

அரசியல் பணியில் ஈடுபட்ட புகாரில் நெல்லை மாவட்ட நில எடுப்பு வட்டாட்சியர் செல்வகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாசில்தாராகவும், நாங்குநேரி நதிநீர் இணைப்பு தாசில்தாராகவும் இருந்தவர் செல்வக்குமார். தற்போது திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறை தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.

இவர் செல்வன் குமரன் என்ற மாற்றுப்பெயரில் நாம் தமிழர் கட்சியில் மண்டல செயலராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சியின் கலந்தாய்வு கூட்டத்திலும் சீமானுடன் செல்வக்குமார் பங்கேற்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவியது.

இந்த தகவல் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து கலெக்டர் தலைமையில் இன்று மாலை விசாரணை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தாசில்தார் செல்வக்குமார் பணியில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்